Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் மோசமடைந்த காற்றின் தரம்!

சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம்!

-

 

சென்னையில் மோசமடைந்து காற்றின் தரம்!
File Photo

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை மக்கள் பட்டாசுகளை வெடித்த நிலையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. இதனால் சென்னையில் உள்ள சாலைகள் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. காற்றின் தரக் குறியீடு மணலியில் 325 ஆகவும், ஆலந்தூரில் 263 ஆகவும், வேளச்சேரியில் 314 ஆகவும், அரும்பாக்கத்தில் 256 ஆகவும், ராயபுரத்தில் 234 ஆகவும், கொடுங்கையூரில் 124 ஆகவும் அதிகரித்துள்ளது.

தீபாவளி வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி.!

அதேபோல், கும்மிடிப்பூண்டியில் 255 ஆகவும், செங்கல்பட்டுவில் 231 ஆகவும் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. மேலும், வேலூரில் 180 ஆகவும், கடலூரில் 175 ஆகவும், புதுச்சேரியில் 164 ஆகவும், சேலத்தில் 142 ஆகவும் காற்று மாசு அதிகரித்துள்ளது.

பட்டாசு வெடித்த சிறுவர்கள் : பற்றி எரிந்த குடிசை.. சிதம்பரம் அருகே பரபரப்பு..

காற்று மாசு காரணமாக சுவாச பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 101-200 என்ற மிதமான காற்று மாசு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. 101- 200 என்ற மிதமான காற்று மாசுவினால் ஆஸ்துமா போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம். 201- 300 அளவிலான மோசமான காற்று மாசுவினால் நீண்ட நேரம் வெளியில் உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம். மோசமான காற்று மாசுவினால் இதய நோய் உள்ளவர்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

MUST READ