பிப்ரவரி 01- ஆம் தேதி முதல் சென்னை- அயோத்தி இடையே நேரடி விமான சேவை தொடங்கவுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் (Spicejet) அறிவித்துள்ளது.
தொழிலதிபர் வீட்டில் தங்கம், வைர நகைகள் கொள்ளை!
இது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, டெல்லி, மும்பை, பாட்னா, பெங்களூரு, ஜெய்ப்பூர், அகமதாபாத் உள்ளிட்ட 8 நகரங்களில் இருந்து அயோத்தியை இணைக்கும் வகையில் நேரடி விமான சேவைகளை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வழங்கும்.
இந்த விமான சேவைகள், வரும் பிப்ரவரி 01- ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இந்த விமான சேவைகளை மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைக்கவுள்ளார். சென்னை, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் இருந்து பிப்ரவரி 01- ஆம் தேதி முதல் அயோத்திக்கு இருமார்க்கத்திலும் நேரடி விமான சேவைகள் வழங்கப்படும்.
எம்.ஜி.ஆர் குறித்த ஆ.ராசாவின் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
போயிங் 737 ரக விமானங்கள் இந்த வழித்தடத்தில் பயன்படுத்தப்படும். சுமார் 189 இருக்கைகளை விமானம் கொண்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து தினசரி மதியம் 12.40 மணிக்கு புறப்படும் விமானம், பிற்பகல் 03.15 மணிக்கு அயோத்தியைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், அயோத்தியில் இருந்து மாலை 04.00 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 07.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தைச் சென்றடையும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.