Homeசெய்திகள்தமிழ்நாடுபெரம்பூரில் பயங்கரம் - பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை

பெரம்பூரில் பயங்கரம் – பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை

-

- Advertisement -

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, செம்பியம் பகுதியை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங். இவர் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக உள்ளார். இவர் பெரம்பூரில் தனது வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக அவரை அரிவாளால் வெட்டினர். இதில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சற்று நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவத்தில் அவரோடு நின்று கொண்டிருந்த இருவரும் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

MUST READ