Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டென்ன குறைந்த தங்கம் விலை

சட்டென்ன குறைந்த தங்கம் விலை

-

- Advertisement -

சட்டென்ன குறைந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 45,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் உச்சத்தை எட்டி வரும் தங்கம் விலை

2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த ஆண்டுதான். விழாக்காலமான அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் தங்க விற்பனை அதிகரித்ததும் ஆர்பிஐ கொள்முதலில் இறங்கியதுமே தங்கத்தின் தேவை அதிகரித்ததற்கு காரணம் என தெரிகிறது.

இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.120 குறைந்து ரூ.45,200- க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ. 5,650-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.81.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 81,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ