Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு

-

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு

வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.

இன்று முதல் HUID நகைகளை மட்டுமே விற்க அனுமதி!

2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த ஆண்டுதான். விழாக்காலமான அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் தங்க விற்பனை அதிகரித்ததும் ஆர்பிஐ கொள்முதலில் இறங்கியதுமே தங்கத்தின் தேவை அதிகரித்ததற்கு காரணம் என தெரிகிறது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.45,936- க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ. 5,742-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 காசுகள் உயர்ந்து ரூ.82.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 200 அதிகரித்து ரூ. 82,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ