Homeசெய்திகள்தமிழ்நாடுபிரதமர் மோடி வருகை - சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு!

பிரதமர் மோடி வருகை – சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு!

-

- Advertisement -

பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்!

பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நாளை (04.03.2024) சென்னை, நந்தனம், YMCA மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதன்பேரில், மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் சென்னை வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் தலைமையில், கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

ஏப்ரல் 29 ஆம் தேதி காசி தெலுங்கு சங்கமத்தில் பிரதமர் மோடி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள், காவல் இணை ஆணையாளர்கள், காவல் துணை ஆணையாளர்கள். உதவி ஆணையாளர்கள், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளின் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் ஆளிநர்கள் உள்பட 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

MUST READ