
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (செப்.21) அதிகாலை முதலே பரவலாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
“விசாரணையில் இருந்து விலக மாட்டேன்”- நீதிபதி திட்டவட்டம்!
சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, அடையாறு, பல்லாவரம், தாம்பரம், போரூர், பூந்தமல்லி, முகப்பேர், வேளச்சேரி, மாங்காடு, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்வோர், அலுவலகம் செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கனமழை காரணமாக, வேலூரில் தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.