Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்யும்!

சென்னையில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்யும்!

-

 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது!
File Photo

சென்னைக்கு தென்கிழக்கே 250 கி.மீ. தொலைவில் மிக்ஜாம் புயல் நிலைக்கொண்டுள்ளது; நாளை மறுநாள் (டிச.05) புயல் கரையைக் கடக்கும் போது, 110 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும். புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணியப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

எச்சரிக்கை: மிக்ஜம் தீவிர புயலாக கரையை கடக்கும் – வானிலை மையம் தகவல்..

நாளை (டிச.04) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்த நிலையில், அது ரெட் அலர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (டிச.04) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பால், குடிநீர், மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் எதிரொலி- நான்கு மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை!

இதனிடையே, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். புயலை எதிர்கொள்ள தேவையான உதவிகளை ஆந்திர அரசுக்கு மத்திய அரசு வழங்கும் என உறுதியளித்துள்ளார்.

MUST READ