சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருவதால், சாலையில் வாகனங்கள் ஊர்ந்துச் செல்கின்றன.
அமைதிக்கு குந்தகம் விளைவித்து வருவது ஆளுநருக்கு அழகல்ல- துரைமுருகன்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று (அக்.06) மதியம் 02.10 மணிக்கு மழை தொடங்கிய நிலையில், தற்போது வரை கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வேளச்சேரி, நந்தம்பாக்கம், ஆலந்தூர், கோயம்பேடு, அண்ணாநகர், வடபழனி உள்ளிட்டப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்துச் செல்கின்றனர். மேலும், சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முடியாமல் உள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்துள்ளனர்.
காவிரியில் நீர் திறக்க கர்நாடகா மறுப்பு-வைகோ கண்டனம்
தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னையில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.