Homeசெய்திகள்தமிழ்நாடு"24 மணி நேரமும் வேலைப் பார்க்கும் இல்லத்தரசிகள்"- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

“24 மணி நேரமும் வேலைப் பார்க்கும் இல்லத்தரசிகள்”- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

-

 

இணையவழி சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள்- பதில் அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம்!
File Photo

குழந்தைகளைக் கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என விடுமுறை இல்லாமல், இல்லத்தரசிப் பார்க்கும் வேலை 24 மணி நேர வேலை எனவும், அதை கணவனின் 8 மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

லியோ-வை அடுத்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டம் காட்டப் போகும் லோகேஷ் கனகராஜ்!

வெளிநாட்டில் வேலைப் பார்த்து அனுப்பி வைத்தத் தொகையைப் பயன்படுத்தி வாங்கி சொத்துகளில் மனைவிக்கு உரிமை இல்லை எனக் கூறி கணவர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கணவன் சம்பாதிப்பதும், மனைவி, குழந்தைகள், குடும்பத்தைக் கவனிப்பதும் பொதுவானது எனவும், குடும்பத்தை மனைவிக் கவனிப்பதால் தான் கணவரால் தனது பணியைச் செய்ய முடிகிறது என்பதால், கணவன் சம்பாதியத்தில் வாங்கும் சொத்து, இல்லத்தரசிக்கும் சம பங்கு பெற உரிமை உள்ளது என உத்தரவிட்டார்.

ரஜினிகாந்த்க்கு ஜோடியாகும் நிரோஷா….. எந்த படத்தில் தெரியுமா?

குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிப்பதன் மூலம் குடும்ப மருத்துவர் போல, 24 மணி நேரமும், விடுமுறை இல்லாமல் ஒரு இல்லத்தரசி மேற்கொள்ளும் பணியைச் சம்பாதியத்திற்காக, கணவன் பார்க்கும் எட்டு மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது என்றும், நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

MUST READ