Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் - ஐகோர்ட் தீர்ப்பு..!!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் – ஐகோர்ட் தீர்ப்பு..!!

-

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் - ஐகோர்ட் தீர்ப்பு..!!
கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் அருந்தி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாகவும், இதில் பலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டிய அரசியல் கட்சிகள் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடர்ந்தன.

சென்னை உயர்நீதிமன்றம்
அதிமுக, பாமக , பாஜக ஆகிய கட்சிகள் தொடங்கிய வழக்குகள் நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் அருந்தி உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

 

 

 

 

MUST READ