இத்தாலியில் சென்னை மேயர்! வைரலாகும் புகைப்படங்கள்
சென்னை மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் இத்தாலியில் உள்ள அர்பேசர் திடக்கழிவு மேலாண்மை நிலையத்தை பார்வையிட்டனர்.
சென்னை மேயரின் ஐரோப்பிய பயணம் குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகம், “சென்னை போன்ற வளர்ந்து கொண்டே வரும் பெருநகரங்களுக்கு திடக்கழிவு மேலாண்மை ஒரு பெரிய சவாலாகவே விளங்கி வருகிறது. வளர்ந்த நாடுகளில் திடக்கழிவு மேலாண்மையை எப்படி செயல்படுத்துகின்றனர் என்று பார்வையிடுவதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேயர் பிரியா இன்று ரோம் நகரில் இத்தாலி நாட்டின் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் திரு. டாட் கோராடோ கிளினி சந்தித்து காலநிலை மாற்றம் மற்றும் அதன் விளைவுகள் குறித்தும் அதன் அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது மதிப்பிற்குரிய துணை மேயர் மகேஷ்குமார், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) திரு.சங்கர்லால் குமாவத் இ.ஆ.ப., மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பொறியாளர்கள் உடனிருந்தனர்.
#ChennaiCorporation pic.twitter.com/r9H0ASQHSU
— Greater Chennai Corporation (@chennaicorp) June 19, 2023
அதன்பின் அவர்கள் ரோம் நகரில் உள்ள உர்பேசர் கழிவு சேகரிப்பு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகளை பார்வையிட்டனர்” எனக் குறிப்பிட்டுள்ளது.