சென்னையில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
உலகக்கோப்பைப் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்த முகமது ஷமி!
சென்னை கே.கே.நகர், கோபாலபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று, தியாகராய நகர், பட்டாளம், மண்ணடி, பெரியமேடு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட 8- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது.
வரி ஏய்ப்பு தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனைகள் நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை 2ஆவது அரையிறுதிப் போட்டி- தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்!
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, தமிழக அமைச்சர்கள், கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.