Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்..

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்..

-

- Advertisement -

சென்னை மாநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம்! -புதிய ஆணையராக அருண் நியமனம்…
சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் புதிய ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் அண்மைக்காலமாக சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில், அடுத்ததாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் இந்த நடவடிக்கை அரசு மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

சந்தீப் ராய் ரத்தோர் தற்போது தமிழ்நாடு காவல் பயிற்சி கல்லூரி டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவருக்கு தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் சென்னை மாநகராட்சியின் புதிய காவல் ஆணையராக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன்மூலம் 110வது சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்க இருக்கிறார். மேலும், புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

MUST READ