
சென்னையில் ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, சேப்பாக்கம், கே.கே.நகர், ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், பெரம்பூர், சூளைமேடு, கோயம்பேடு, விருகம்பாக்கம், வானகரம், மதுரவாயல், ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, திருவேற்காடு, அயப்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் இன்று (ஜூன் 18) காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது.
எஸ்.ஜி.சூர்யாவுக்கு 15 நாட்கள் காவல் விதித்து நீதிபதி உத்தரவு!
இந்நிலையில், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை தொடரும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழைப் பெய்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளது.
எம்.பி. நவாஸ் கனிக்கும், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் இடையே கடும் வாக்குவாதம்!
சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்து வருவதால் இதமான சூழல் நிலவுகிறது. கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த சூழலில் சென்னையின் வானிலை மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.