Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னையில் வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

-

சென்னையில் கனமழையால் வழித்தடம் மாற்றப்பட்ட பல்வேறு விரைவு ரயில்கள் இன்று வழக்கம்போல் சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை காரணமாக பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி ரயில் நிலையத்துக்கு இடையே உள்ள பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.
இதனால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த பல்வேறு ரயில்கள் நேற்றிரவு ரத்து செய்யப்பட்டன. இன்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படவிருந்த சில ரயில்கள் முழுமையாவும், சில ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் தற்போது மழை குறைந்துள்ள நிலையில் பேசின் பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையத்துக்கு இடையே உள்ள பாலத்தில் இருந்த மழைநீர்
வடிந்ததால், ரயில் சேவை வழக்கம்போ ல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏற்காடு, நீலகிரி, காவேரி , சேரன் உள்ளிட்ட ரயில்கள் வேறு ரயில் நிலையங்களில் இன்று காலை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த ரயில்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வழக்கம்போல் வந்துசேர்ந்துள்ளன.

கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னையில் இருந்து கோவைக்கு இன்று காலை 6 மணிக்கு புறப்பட இருந்த கோவை விரைவு ரயி ல், காலை 10 மணிக்கு கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், திருவனந்தபுரம் விரைவு ரயில், மும்பை சிஎஸ்டி விரைவு ரயில்,  வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில்கள், வழக்கம்போல்
சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
மைசூரு – சென்னை காவேரிவிரைவு ரயி ல் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

MUST READ