டெல்டா மாவட்டங்களில் ஜூன் 9-ல் முதலமைச்சர் ஆய்வு
டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 9-ஆம் தேதி ஆய்வு செய்கிறார்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை பருவ நெல்சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரி டெல்டா பாசன கால்வாய், நீர்நிலைகளில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை வரும் 9-ம் தேதி நேரில் ஆய்வு செய்ய உள்ள முதல்வர் ஸ்டாலின், தூர்வாரும் பணி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிவதோடு, விவசாயிகளின் குறைகளையும் கேட்டறிய உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாசனத்திற்காக மேட்டூர் அணையில் ஜூன் 12 ஆம் தேதி நீர் திறக்கப்படவுள்ள நிலையில், முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார். முன்னதாக டெல்டா விவசாயிகள் வாய்க்கால் மற்றும் நீர்நிலைகளை தூர்வார வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்றடைய வேண்டும் என்றால் நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.