தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிகாகோ நகரில் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தார்.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். முதலில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு சென்ற முதலமைச்சர், அங்கு முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து பேசினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் இதுவரை ரூ.1,300 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரான்சிஸ்கோவிலிருந்து நேற்று சிகாகோ நகருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றடைந்தார். சிகாகோ விமான நிலையத்தில் அவருக்கு இந்திய துணைத் தூதர் சோமநாத் கோஷ் மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து, நேற்று ஓட்டுநர் இல்லாத வாகனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணித்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோ நகரில் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்துள்ளார். சிகாகோ நகர சாலைகள் மற்றும் கடற்கரை சாலையில் முதலமைச்சர் உற்சாகமாக சைக்கிள் ஒட்டிச்சென்ற காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன