Homeசெய்திகள்தமிழ்நாடுசெம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -
kadalkanni

சென்னை செம்மொழிப் பூங்காவில்  4-வது சென்னை மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை செம்மொழிப் பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 4-வது சென்னை மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்து மலர் செடிகளை பார்வையிட்டார். மேலும் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு வடிவங்களையும் முதலமைச்சர் பார்வையிட்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். அத்துடன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் பணியாற்றக்கூடிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் முதலமைச்சர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்த கண்காட்சியில் பெட்டுனியா, சால்வியா, செவ்வந்தி, ரோஜா, சாமந்தி, டயாந்தஸ், கோழிக்கொண்டை, வாடாமல்லி,  நித்திய கல்யாணி, டெய்சி போன்ற 50 வகையிலான பூச்செடி வகையிலான, 30 லட்சம் மலர் தொட்டிகள் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும், மலர்களாக அலங்கரிக்கப்பட்ட யானை, பட்டாம் பூச்சி, ரயில் பெட்டி, கப்பல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வடிவங்கள் இடம்பெற்றுள்ளது.  மேலும், டிரசினா, பைகஸ், கோலியஸ், அரேலியா, கார்டிலைன்,
அக்லோனிமா, எராந்திமம், ஃபிலோடென்ட்ரான் போன்ற பல்வேறு அலங்கார
இலைத்தாவரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இம்மலர்காட்சி  இன்று தொடங்கி வரும் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. செம்மொழி பூங்காவில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவுசீட்டு வழங்கப்படும். மேலும் https://tnhorticulture.in/spetickets/ என்ற இணையதளம் வாயிலாகவும் நுழைவுச்சீட்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், மலர் கண்காட்சியை கடந்தாண்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்ட நிலையில் இந்த ஆண்டு பொங்கல் விடுமுறை வருவதால் கூடுதல் மக்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பாக தெரிவித்தார். மலர் கண்காட்சி கட்டணம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், மேயர் பிரியா மற்றும் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

 

MUST READ