திருத்தணியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார். அமைச்சர் நாசர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பதிவுத் துறையின் சார்பில் மதுரை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள 7 பதிவு மண்டலங்களில் 30 கோடியே 27 இலட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தார்.
திருத்தணியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பழைய தாசில்தார் அலுவலகம் அருகில் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த சார் பதிவாளர் அலுவலகத்திற்கு ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து திருத்தணியில் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுபான்மையினர் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபுசங்கர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகம் வருகை தரும் பொதுமக்கள் வசதிக்காக 3249 சதுர அடி பரப்பளவில் 2 அடுக்கு கொண்ட புதிய கட்டிடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய அறைகள் மற்றும் பதிவேடுகள் பாதுகாப்பு அறை, கணினி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் எளிதில் பத்திரப்பதிவு சேவை பெறவசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். தலைமை செயற்குழு உறுப்பினர் பூபதி திருத்தணி நகர மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, பலர் கலந்து கொண்டனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி…. வெளியான புதிய தகவல்!