Homeசெய்திகள்அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

-

- Advertisement -

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளையொட்டி சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135 ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கோ.வி.செழியன், மதிவேந்தன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், கயல்விழி செல்வராஜ், மு.பெ.சாமிநாதன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

MUST READ