Homeசெய்திகள்தமிழ்நாடுவிழுப்புரம் மாவட்டத்தில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

-

விழுப்புரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொண்டார்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக  கனமழை பெய்து வருகிறது. இதனால் மரக்காணம், திண்டிவனம், வானுர், செஞ்சி, மயிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் இன்று சராசரியாக 29 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நன்றி.... தென் மாவட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவி வெளியிட்ட வீடியோ!

கனமழை காரணமாக 78 கிராமங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதியில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் 3000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுமார் 59 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.  மேலும், மழைநீர் வெளியேற்றும் பணிகளுக்கு மின்மோட்டார்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்கிறார். அதிகளவில் பாதிப்பிற்குள்ளான விழுப்புரம், மரக்காணம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளைய தினம் (டிச.2) நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். மழை பாதிப்பு, மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார்

MUST READ