Homeசெய்திகள்தமிழ்நாடுபட்டாசு ஆலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு... தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

பட்டாசு ஆலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு… தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

-

சிவகாசி அருகேயுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழிலாளர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுநகர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கள ஆய்வு மேற்கொள்கிறார். இதனையொட்டி சென்னையில் இருந்து விமானம் முலம் மதுரை சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர்சாலை மார்க்கமாக விருதுநகர் சென்றடைந்தார். விருதுநகர் மாவட்ட எல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது வாகனத்திலிருந்து இறங்கி பொதுமக்களை சந்தித்துப் பேசிய முதலமைச்சர், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

பின்னர் சிவகாசி அருகேயுள்ள கன்னிச்சேரிபுதூர், மேல சின்னையாபுரத்தில் உள்ள மதன் பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பின்னர், பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து, பட்டாசு உற்பத்தியாளர்களை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளார்.

MUST READ