போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – முதலமைச்சர் ஆலோசனை
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட வருகிறார்.
போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
துறைவாரியாக செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து போதை பொருள்கள் பயன்படுத்துவதற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிர படுத்தவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு இருக்கிறது.
தமிழகத்தின் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் தமிழ்நாடு அரசு நடத்தி வரக்கூடிய நிலையில் தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் என்பது நடைபெற்ற வருகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முதலமைச்சர் உடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலாளர் தலைமையில் இந்த ஆய்வு கூட்டம் அதாவது போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் என்பது நடத்தப்பட்டு அதிகாரிகளுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் நடமாட்டம் தொடர்பாகவும் மாவட்ட வாரியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் முக்கிய ஆலோசனை முதலமைச்சர் தற்போது மேற்கொண்டு வருகிறார்.
இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறக்கூடிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் முருகானந்தம், காவல்துறை சார்பில் டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் கூடுதல் டிஜிபி அருண், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர் உள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான முக்கிய அறிவுரைகளை முதலமைச்சர் வழங்க உள்ளார்.