Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சரின் அரியலூர் – பெரம்பலூர் சுற்றுப் பயணம் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது – தமிழக அரசு

முதலமைச்சரின் அரியலூர் – பெரம்பலூர் சுற்றுப் பயணம் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது – தமிழக அரசு

-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களில் மேற்கொண்ட சுற்றுப் பயணம், வெற்றிப் பயணமாக அமைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களில் 15.11.2024 அன்று சுற்றுப் பயணம் மேற்கொண்டு மகத்தான பல திட்டங்களைச் செயல்படுத்தி ஏழை எளியோர்க்கு நலத்திட்டங்களை எல்லாம் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்கள் விழாக்கோலம் கொண்டு மக்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்த காட்சிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியைப் பறைசாற்றின என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டத்தில் சிப்காட் தொழிற்பூங்காவில் 1000 கோடி ரூபாய் முதலீட்டான புதிய காலணிகள் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார் என்றும், இந்தக் காலணி தொழிற்சாலை 15,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய அருமையான திட்டமாகும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும்  2-வது கட்டமாக ரூ.22 கோடி மதிப்பீட்டில் திருமானூர் வாரணவாசி அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டத்தின் 2-ஆம் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங் கிவைத்தார் என்றும், இந்தத் திட்டத்தில் தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள 76,075 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுவதாகவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

tamilnadu assembly

தொடர்ந்து, அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 120 கோடி ரூபாய் மதிப்பிலான 53 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் என்றும், ரூ.88 கோடி மதிப்பீட்டிலான 507 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைத்து,  ரூ.170 கோடி மதிப்பில் 21 ஆயிரத்து 862 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கியதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

இந்த நிகழ்ச்சிகளில் பல அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நான் பிரச்சினைகளை நேர்கொண்டு நிற்கிறேன். அந்தப் பிரச்சினையை தீர்க்கிறேன். மக்களுக்காகப் பார்த்துப் பார்த்துத் திட்டங்கள் தீட்டுகிறேன். திட்டங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்று களஆய்வு செய்கிறேன். சொன்னால் சொன்ன நாட்களுக்குள் திட்டங்களைத் திறந்து வைக்கிறேன். அதனால்தான், இந்த ஸ்டாலின் எங்கு சென்றாலும் மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள். எங்கள் குறைகளைப் போக்குவார் என்ற நம்பிக்கையோடு தேடிவந்து மனுக்களை கொடுக்கிறார்கள், அந்த நம்பிக்கையை எந்நாளும் காப்பாற்றுவேன் காப்பாற்றுவேன் என்று உறுதி தருகிறேன்” என பெருமிதத்தோடு குறிப்பிட்டார் என தமிழக அரசு கூறியுள்ளது.

தொடர்ந்து, அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் அரசின் வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் முதலமைச்சசர் ஆய்வு மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஒருநாள் அரியலூர் – பெரம்பலூர் மாவட்டச் சுற்றுப் பயணம் அப்பகுதி மக்களிடையே மட்டுமல்ல, அம்மாவட்ட மக்களிடையே மட்டுமல்ல  தமிழ்நாட்டு மக்கள் அனைவரிடத்திலும் இந்த அரசின் மீதும் முதலமைச்சர் மீதும் மிகுந்த பெருமிதம்கொள்ளச் செய்த வெற்றிப் பயணமாக அமைந்தது என்றால் அது மிகையல்ல, என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

MUST READ