Homeசெய்திகள்தமிழ்நாடு'அனைத்துக் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் அழைப்பு'!

‘அனைத்துக் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் அழைப்பு’!

-

 

MKStalin

தமிழகத்தில் அனைத்து அரசுத் தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை அனைத்துக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு தொடங்கி வைக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

ஹிஜாப் அணிந்துசெல்லத் தடையில்லை எனும் அறிவிப்பை வெளியிடுக- சீமான்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு, 1.14 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருவதாக தமிழக அரசுத் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, அனைத்து நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 31,008 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது.

“இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூபாய் 10 கோடி நிதியுதவி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இதன் மூலம் 15.75 லட்சம் மாணாக்கர்கள் பயன்பெறுவார்கள் என்றும், தமிழக அரசின் செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் ஆகஸ்ட் 25- ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார். மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரவர் தொகுதியில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்குமாறு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., பா.ஜ.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்டக் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

MUST READ