Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சரின் அமெரிக்க பயணம் மாபெரும் வெற்றி-அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உற்சாகம்

முதலமைச்சரின் அமெரிக்க பயணம் மாபெரும் வெற்றி-அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உற்சாகம்

-

- Advertisement -

 

முதலமைச்சரின் அமெரிக்க பயணம் மாபெரும் வெற்றி-அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உற்சாகம்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்று திரும்பியுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினின் பயணம் வெற்றிப் பெற்றுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டுகளில் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் தொழில்களையும் ஈர்த்துள்ளதோடு, 2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் முனைப்போடு முதலமைச்சர் எடுத்து வருகிறார்.

அதன் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் மாபெரும் வெற்றி என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்திருக்கிறார். ரூ.7,616 கோடி புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 11,516 இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் ஈட்டப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் அமெரிக்க பயணம் – தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பிற்கும் கிடைத்த வெற்றி! – செல்வப்பெருந்தகை

மாநிலத்தில் பரவலான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதிலும் , பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையிலும் இந்தியாவின் முதன்மை முதலமைச்சரான திராவிட நாயகர் அதனை சாதித்துக் காட்டுவார் என அவர் கூறியுள்ளார்.

MUST READ