Homeசெய்திகள்தமிழ்நாடுவர்த்தக மையத்தில் தலைமைச் செயலாளர் ஆய்வு!

வர்த்தக மையத்தில் தலைமைச் செயலாளர் ஆய்வு!

-

- Advertisement -
kadalkanni

 

வர்த்தக மையத்தில் தலைமைச் செயலாளர் ஆய்வு!

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகின்ற ஜனவரி 07, 08 ஆகிய தேதிகளில் ‘உலக முதலீட்டாளர் மாநாடு 2024’ நடைபெறுவதை முன்னிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. இன்று (டிச.22) காலை 11.00 மணிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சூரிய சக்தியால் இயங்கும் போக்குவரத்து தானியங்கி சமிக்ஞைகள்

இந்த ஆய்வின் போது, பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளரும், ஆணையாளருமான டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அரசு முதன்மைச் செயலாளரும், சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநருமான மு.அ.சித்திக், இ.ஆ.ப., பொதுப்பணித் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி.அருண் ராய் இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத் இ.ஆ.ப., இணை ஆணையர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., செயல் இயக்குநர் டாக்டர் வி.ஜெய சந்திர பானு ரெட்டி, இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

MUST READ