Homeசெய்திகள்தமிழ்நாடுசிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றிய இளைஞர் மீது புகார்!

சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றிய இளைஞர் மீது புகார்!

-

 

சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றிய இளைஞர் மீது புகார்!

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த ஆரிக்கமேடு பகுதியில் கடந்த ஓராண்டு காலமாக வசித்து வருபவர் ஜெயா (வயது 17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமி. வில்லிவாக்கத்தில் உள்ள பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரோஹித் என்ற 22 வயது இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் ஆர்வம் காட்டும் சிறு முதலீட்டாளர்கள்!

இது சிறுமியின் தாய்க்கு தெரிய வர, அவர் சிறுமியைக் கண்டித்துள்ளார். பின்னர் வில்லிவாக்கம் பகுதியிலிருந்து வீட்டை காலி செய்து ஆவடி அடுத்துள்ள ஆரிக்கமேட்டுக்கு குடியேறினர். எனினும், சிறுமியின் காதல் தொடர்ந்து நீடித்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், தனது மகள் கர்ப்பமான செய்தியை அறிந்த தாய் உடனடியாக ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனினும், புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

“பருப்பு இருப்பு குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்”- மத்திய அரசு உத்தரவு!

இதுகுறித்து ஆவடி மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சுகுணா கூறுகையில், “ரோஹித்தையும், அந்த சிறுமியையும் அழைத்து விசாரணை நடத்தினோம். அந்த சிறுமி தற்போது கர்ப்பமாக இல்லை; சம்மந்தப்பட்ட சிறுமிக்கு தற்போது 18 வயது” என்று கூறியுள்ளார். அதேபோல் இது குறித்து சிறுமியின் குடும்பத்தாருடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

MUST READ