உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்று தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி!
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழா இன்று (ஏப்ரல் 12) தொடங்கி ஏப்ரல் 23- ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெறும்.
வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், ஏப்ரல் 21- ஆம் தேதி மீனாட்சியம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஏப்ரல் 22- ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா இன்று தமிழகம் வருகை!
சித்திரை திருவிழாவின் சிகரமான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு வரும் ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெறும். சித்திரை திருவிழா காரணமாக, மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.