சித்ரா பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 4,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கடந்த ஏப்ரல் 25- ஆம் தேதி அன்று சித்திரை வசந்த உற்சவ விழா தொடங்கியது.
அதனை தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்த நிலையில், திருவண்ணாமலை செல்லும் பக்தர்களின் சென்னை, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சித்ரா பௌர்ணமியையொட்டி தொடங்கிய கிரிவலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
புதிய படத்தில் கவினுக்கு ஜோடியாகும் ‘அயோத்தி’ பட நடிகை!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற சதுரகிரி மலை கோயிலில் சித்ரா பௌர்ணமியையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சித்ரா பௌர்ணமியையொட்டி, காலை 07.00 மணி முதலே மலையேறி பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
மழை பெய்ய வாய்ப்புள்ளதால், நீரோடைகளில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.