Homeசெய்திகள்தமிழ்நாடுதஞ்சையில் மாநில அளவில் நாய்கள் கண்காட்சி

தஞ்சையில் மாநில அளவில் நாய்கள் கண்காட்சி

-

தஞ்சையில் மாநில அளவில் நாய்கள் கண்காட்சி

தஞ்சாவூரில் முதன்முறையாக நடைபெற்ற மாநில அளவிலான நாய்கள் கண்காட்சியில், பல்வேறு இன நாய்களை பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.

தஞ்சை மாவட்ட நிர்வாகத்துடன், மிருகவதை தடுப்பு சங்கம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை ஆகியன இணைந்து முதன்முறையாக தஞ்சையில் மாநில அளவில் நாய்கள் கண்காட்சியை ஏற்பாடு செய்தது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்த கண்காட்சியில் ஆட்சியர் மதுரை, திருச்சி, ஈரோடு என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது செல்ல பிராணிகளை அழைத்து வந்திருந்தனர். குறிப்பாக கிரேடன், பிரஞ்ச் புல்டாக், ராட்வீலர்,அலங்கு, ராஜபாளையம், ஷிட்-சூ, லேப்ரடார், கோல்டன் ரெட்ரீவர் என 30க்கு மேற்பட்ட நாய்கள் பங்கேற்றிருந்தது, கண்காட்சிக்கு வந்த ஏராளமான பள்ளி மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

கண்காட்சியில், பல வகையான நாய்களை காட்சிப்படுத்திய நாய் வளர்ப்போர், இதுபோன்ற கண்காட்சியை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியால் செல்ல பிராணி வளர்ப்போர் மட்டுமல்லாது வளர்ப்புபிராணிகளும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தனர்.

செல்ல பிராணிகளை வளர்க்க ஊக்கப்படுத்துவது மற்றும் மிருகங்களை வதைக்காமல் அன்பு செல்ல வேண்டும் என்பதற்காக தஞ்சையில் முதன்முறையாக மாநில அளவிலான இந்த கண்காட்சி நடைபெற்றது. இதனை பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் கண்டுகளித்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கண்காட்சியில் பங்கேற்ற நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டது.

MUST READ