Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 26-ல் வகுப்புகள் தொடக்கம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 26-ல் வகுப்புகள் தொடக்கம்

-

- Advertisement -

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 26-ல் வகுப்புகள் தொடக்கம்

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு பட்டப்படிப்பில் சேர சுமார் 3 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கல்லூரி கல்வி இயக்குனர் கீதா தெரிவித்துள்ளார்.

கலை மற்றும் அறிவியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1 லட்சத்து 7ஆயிரத்து 395 இளநிலை பட்டப்படிப்பு இடங்களில் சேர்வதற்கு மே.8ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மே 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

அதன்படி, கடைசி நாளான இன்று மாலை வரை, 2,99,558 விண்ணப்பப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கட்டணத்தை செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2,44,104. மாணவர்கள் 1,15,752 விண்ணப்பமும், மாணவிகள் 1,28,274 விண்ணப்பமும், மூன்றாம் பாலினத்தவர் 78 விண்ணப்பங்களையும், அரசுப்பள்ளிகளில் படித்த மாணவிகள் 54,638 விண்ணப்பங்களையும் சமர்ப்பித்துள்ளனர். வரும் 25ஆம் தேதி தரவரிசை பட்டியல் கல்லூரிகளுக்கு வழங்கப்படும் என்றும், 29 முதல் 31 வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் எனவும் கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர எப்படி விண்ணப்பிப்பது?: உயர் கல்வித்துறை  விளக்கம்

இது குறித்து கல்லூரி கல்வி இயக்குனர் கீதா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஜுன் ஒன்றாம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்றும் ஜூன் இரண்டாம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்றும் முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 26 ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ