Homeசெய்திகள்தமிழ்நாடு"கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்கக் கூடாது" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

“கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்கக் கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

-

சிதம்பதம் நடராஜர் கோயிலில் ஆறு கால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை மீது தரிசனம் செய்வதை தடுக்க கூடாது என பொது தீட்சிதர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் தரிசனம் - தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை

இந்த வழக்கு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஆறு கால பூஜை நேரத்தில் மட்டும் பக்தர்கள் கனகசபையில் அனுமதிக்கப்படுவதில்லை என்றும், மற்ற நேரங்களில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை என்றும் பொதுதீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி - சிக்கலில் அதிகாரிகள்

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் ‘ஆறு கால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை மீது தரிசனம் செய்வதை தடுக்கக் கூடாது’ என சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களுக்கு உத்தரவிட்டு, உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

MUST READ