Homeசெய்திகள்தமிழ்நாடுநீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்!

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்!

-

 

"தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிடுக"- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
Photo: DMK

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக்கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 14) கடிதம் எழுதியுள்ளார்.

3 நாட்களுக்கு மழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்

இது தொடர்பான தமிழக முதலமைச்சரின் கடிதத்தில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர தாமதம் ஏற்படுவதால் துரதிருஷ்டவசமான விளைவுகள் ஏற்படுகின்றன. பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவச் சேர்க்கை நடைபெற வேண்டும்.

தமிழ்நாடு அரசின் சட்ட முன்வடிவு தொடர்பாக மத்திய அமைச்சகங்கள் கோரிய விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. நீட் அடிப்படையிலான சேர்க்கையால் மாணவர், பெற்றோர்கள், கவலை, மன அழுத்தம் அடைந்துள்ளனர். நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை அதிக கட்டணம் செலுத்தி பயிற்சி பெறும் ,மாணவர்களுக்கே சாதகமாக உள்ளது.

நீட் தேர்வால் தற்கொலைச் செய்துக் கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடத்தியிருந்தால் தற்கொலைகளைத் தவிர்த்திருக்க முடியும். நுழைவுத்தேர்வு முறை மாணவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பது தமிழ்நாட்டின் கருத்து. நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதா தமிழக மக்களின் ஒட்டுமொத்த கருத்தின் பிரதிபலிப்பு ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கிறோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

குரோம்பேட்டை மாணவர் மற்றும் தந்தை தற்கொலைச் செய்துக் கொண்ட விவாகரத்தை குறிப்பிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ