Homeசெய்திகள்தமிழ்நாடுஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்...திருச்சியில் கலைஞர் நூலகம் - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்…திருச்சியில் கலைஞர் நூலகம் – முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

-

ஒசூரில் 2000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் எனவும், திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை ஜூன் 20ம் தேதி கூடியது. வருகிற 29ம் தேதி வரை சட்டப்பேரவை நடைபெறவுள்ள நிலையில் 16 அமர்வுகளில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளன. எதிர்க்கட்சிகள் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அதிமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, ஒசூரில் 2000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது. திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். சேலம் மாவட்டத்தில் ஒரு நூலகம்
மற்றும் அறிவுசார் மையம் அமைப்பது குறித்த அறிவிப்பு அடுத்த நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்க்கலாம் என கூறினார்.

MUST READ