ஸ்பெயின் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.
26 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் 12 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை
தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், 10 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த ஜனவரி 27- ஆம் தேதி ஸ்பெயினுக்கு சென்றார். அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் நேரில் சந்தித்துப் பேசினார்.
இதன் பலனாக தமிழ்நாட்டில் ஹபக் லாய்டு நிறுவனம் ரூபாய் 2,500 கோடி முதலீடு செய்ய முன் வந்துள்ளது. அதேபோல், ஸ்பெயினின் எடிபன் நிறுவனத்துடன் ரூபாய் 540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
பேருந்தின் பின் இருக்கை பலகை உடைந்து விழுந்ததில் பெண் பயணிக்கு காயம்!
இந்த நிலையில், 10 நாள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.07) காலை 08.00 மணிக்கு சென்னை திரும்பினார். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.