Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சரின் தேர்தல் சுற்றுப்பயண விவரம் வெளியீடு!

முதலமைச்சரின் தேர்தல் சுற்றுப்பயண விவரம் வெளியீடு!

-

 

"சீண்டிப் பார்க்க வேண்டாம்; எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும்....."- மத்திய பா.ஜ.க. அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
Photo: CM MKStalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரிக்கிறார். அதன்படி, முதலமைச்சரின் தேர்தல் சுற்றுப்பயண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அ.ம.மு.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

வரும் மார்ச் 22- ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர், மார்ச் 23- ஆம் தேதி தஞ்சை, நாகை, மார்ச் 25- ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, மார்ச் 26- ஆம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், மார்ச் 27- ஆம் தேதி தென்காசி, விருதுநகர், மார்ச் 29- ஆம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரி, மார்ச் 30- ஆம் தேதி சேலம், கள்ளக்குறிச்சி, மார்ச் 31- ஆம் தேதி ஈரோடு, நாமக்கல், கரூர், ஏப்ரல் 02- ஆம் தேதி வேலூர், அரக்கோணம், ஏப்ரல் 03- ஆம் தேதி திருவண்ணாமலை, ஆரணி, ஏப்ரல் 05- ஆம் தேதி கடலூர், விழுப்புரம், ஏப்ரல் 06- ஆம் தேதி சிதம்பரம், மயிலாடுதுறை, ஏப்ரல் 07- ஆம் தேதி புதுச்சேரி, ஏப்ரல் 09- ஆம் தேதி மதுரை, சிவகங்கை, ஏப்ரல் 10- ஆம் தேதி தேனி, திண்டுக்கல், ஏப்ரல் 12- ஆம் தேதி திருப்பூர், நீலகிரி, ஏப்ரல் 13- ஆம் தேதி கோவை, பொள்ளாச்சி, ஏப்ரல் 15- ஆம் தேதி திருவள்ளூர், வடசென்னை, ஏப்ரல் 16- ஆம் தேதி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஏப்ரல் 17- ஆம் தேதி தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய மக்களவைத் தொகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபடவுள்ளார்.

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 21 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களையும், தேர்தல் அறிக்கையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ