எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், நேற்றிரவு (ஜூன் 22) பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவிற்கு தனி விமானம் மூலம் சென்றடைந்தார். விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பீகார் மாநில அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
“50 நாட்களாக மணிப்பூர் பற்றி எரிகிறது; ஆனால் பிரதமர் மோடி….”- ராகுல் காந்தி கண்டனம்!
அதைத் தொடர்ந்து, பாட்னாவில் உள்ள இல்லத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவருமான லாலு பிரசாத் யாதவை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதைத் தொடர்ந்து, லாலு பிரசாத் யாதவும் சால்வை அணிவித்து, ‘Karunanidhi Life’ என்ற புத்தகத்தையும் வழங்கினார்.
முன்னதாக, லாலு பிரசாத் யாதவின் பாதங்களைத் தொட்டு வணங்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிப் பெற்றார்.
“பயங்கரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் தீவிர முயற்சி”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
இந்த நிகழ்வின் போது, லாலுவின் மகனும், பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.