Homeசெய்திகள்தமிழ்நாடுசிங்கப்பூர் அமைச்சர்கள், தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

சிங்கப்பூர் அமைச்சர்கள், தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

-

 

சிங்கப்பூர் அமைச்சர்கள், தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!
Photo: CM Mkstalin

முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (மே 24) காலை 10.00 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி) சிங்கப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிங்கப்பூரின் போக்குவரத்து, தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், சட்டத்துறை மற்றும் உள்துறை அமைச்சர் கா.சண்முகம் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார்.

இன்று அதிகாலை பிளக்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து

அதைத் தொடர்ந்து, டெமாசெக், செம்கார்ப், கேபிட்டாலாண்டு இன்வெஸ்ட்மெண்ட் ஆகிய நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிறுவனங்கள் அனைத்தும் சிங்கப்பூர் அரசுக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில், சிங்கப்பூருக்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன், தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!

இன்று (மே 24) மாலை நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இந்த மாநாட்டில் சுமார் 350 நிறுவனங்களைச் சேர்ந்த தலைமை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

MUST READ