Homeசெய்திகள்தமிழ்நாடு"செங்கோல் குறித்து மத்திய அமைச்சரும், ஆளுநரும் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் கலந்து கொண்டது சரியா?"-...

“செங்கோல் குறித்து மத்திய அமைச்சரும், ஆளுநரும் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் கலந்து கொண்டது சரியா?”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

-

 

 

"செங்கோல் குறித்து மத்திய அமைச்சரும், ஆளுநரும் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் கலந்து கொண்டது சரியா?"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!
Photo: TN Govt

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் தனது அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று (மே 31) இரவு சென்னைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

கேள்வி- நீங்கள் மாநிலத்தில் இல்லாத போது அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவர் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி இருப்பது பற்றி?

முதலமைச்சர் பதில்- பா.ஜ.க. ஆட்சியை பொறுத்த வரைக்கும் வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவற்றைப் பயன்படுத்தி பழி வாங்குவது, அச்சுறுத்துவது எல்லாம் பல மாநிலங்களில் நடந்துக் கொண்டிருக்கிறது. இது இங்கே தொடங்கி இருக்கிறது. இது உங்களுக்கே தெரியும். இதைப் பற்றி நான் உங்களுக்கு விளக்கமாக சொல்ல வேண்டியதில்லை.

தமிழகம் திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கேள்வி- செங்கோல் குறித்து ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனும், தமிழ்நாடு கவர்னரும் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாடு அரசின் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டது சரியா?

முதலமைச்சர் பதில்- ஒன்றிய அரசின் சார்பிலான விழா குறித்த கலந்துரையாடல் என்று சொல்லித் தான் அழைத்தார்கள். அதனால் தான் எனக்கு தகவல் வந்தவுடன் அமைச்சர் சேகர் பாபுவை நானே கலந்து கொள்ளுங்கள் என்று அனுப்பி வைத்தேன். ஆனால் சென்ற பிறகு என்ன நடந்தது என்று உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். நிகழ்ச்சிக்கு போன அமைச்சர் சேகர் பாபுவே விளக்கமாக சொல்லி இருக்கிறார். குடியரசுத் தலைவர் பாராளுமன்ற கட்டடத்தைத் திறந்து வைக்க வேண்டும் அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று சேகர் பாபு அதே இடத்தில் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.

“சிவக்குமார் அதுவரை பொறுமை காப்பார் என நினைக்கிறேன்”- அமைச்சர் துரைமுருகன் அறிக்கை!

கேள்வி- நாளை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு குறித்து?

முதலமைச்சர் பதில்- நாளை (ஜூன் 01) மாலை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதலமைச்சரும் என்னைச் சந்திப்பதற்காக நேரம் கேட்டு இருக்கிறார்கள். நேரம் கொடுத்திருக்கிறேன். நாளை (ஜூன் 01) மாலை என்னை சந்திக்கிறார்கள்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MUST READ