Homeசெய்திகள்தமிழ்நாடுஜப்பானில் புல்லட் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம்!

ஜப்பானில் புல்லட் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம்!

-

 

ஜப்பானில் புல்லட் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம்!
Photo: CM MKstalin

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், சென்னையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டி

அங்கு ஒசாகா நகரில், முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து, ஜப்பான் வாழ் தமிழர்களை நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில், ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணி நேரத்திற்குள் அடைந்துவிடுவோம்.

புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்கும் கட்சிகள், பங்கேற்காதக் கட்சிகள் குறித்து பார்ப்போம்!

உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ