Homeசெய்திகள்தமிழ்நாடுதொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூருக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூருக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

 

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூருக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
File Photo

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இரண்டு நாள் பயணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை (மே 22) சிங்கப்பூருக்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து, ஜப்பான் நாட்டிற்கும் செல்லவுள்ளார்.

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தைக் கண்டுகளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

தொழிற்துறை அதிகாரிகளோடு சிங்கப்பூர் செல்லும் முதலமைச்சர், அங்கு மே 24- ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துக் கொள்ளவிருக்கிறார். இந்த மாநாட்டில் சிங்கப்பூர்- இந்திய தொழில் மற்றும் வர்த்தச் சபை உறுப்பினர்களும், அரசு அதிகாரிகளும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

முன்னதாக, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றுள்ளார்.

அடுத்தாண்டு ஜனவரி மாதத் தொடக்கத்தில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் வாழ் தமிழர்களையும், சிங்கப்பூர் அமைச்சர்களையும் நேரில் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ