Homeசெய்திகள்தமிழ்நாடுநெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -
kadalkanni

 

நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: TN Govt

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் சார்பில் இன்று (செப்.07) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் சார்பில், நாமக்கல் மாவட்டத்தில் 280 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் கடின புருவங்களுடன் கூடிய இருவழித்தடமாக மேம்படுத்தப்பட்ட மோகனூர்- நாமக்கல்- சேந்தமங்கலம்- ராசிபுரம் சாலை, திருவொற்றியூரில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே 58 கோடியே 64 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நான்கு வழித்தட உயர்மட்ட பாலம், திருப்பூர் மாவட்டத்தில் 53 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட பல்லடம்- தாராபுரம் சாலை மற்றும் கோயம்புத்தூர் நகரில், கோயம்புத்தூர்- மேட்டுப்பாளையம் சாலை மற்றும் கணபதி மணியகாரம்பாளையம் சாலை சந்திப்பில் 41 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நான்கு வழித்தடச் சாலை மேம்பாலம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரிக்கை!

இந்த நிகழ்ச்சியில், தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா இ.ஆ.ப., நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் இ.ஆ.ப. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ