- Advertisement -
போலிச் சாமியாரே 100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்- போஸ்டர் யுத்தம்
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து, இந்துக்களுக்கு எதிராக பேசியதாக பாஜவினர் அவதூறு பரப்பி வருகின்றனர். இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்ட னம் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையே, சனாதனம் குறித்து பேசிய அமைச் சர் உதயநிதி தலைக்கு ரூ. 10 கோடி என அயோத்தியைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியா என்ற சாமியார் அறிவித்துள்ளார். வன்முறையை தூண்டும் வகையிலும், மக்களிடையே மத ரீதியாக பிளவை ஏற்படுத்தும் வகையிலும் பேசிய உத்திரப்பிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவை கைது செய்யக்கோரி, பல்வேறு இடங்களில் உபி சாமியாரின் உருவ பொம்மையை எரித்து திமுக இளைஞர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கோவையில் திமுகவினர், ‘போலிச் சாமியாரே 100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்’ என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக சார்பில் ‘ சனாதனம் எங்கள் உயிர் மூச்சு’ என போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.