Homeசெய்திகள்தமிழ்நாடுகோவை : ஆர்.என்.ரவி நிகழ்ச்சியில் கருப்பு உடை அணிந்து வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு 

கோவை : ஆர்.என்.ரவி நிகழ்ச்சியில் கருப்பு உடை அணிந்து வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு 

-

 

 

கோவை : ஆர்.என்.ரவி நிகழ்ச்சியில் கருப்பு உடை அணிந்து வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு 

கோவையில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்வில் கருப்பு உடை அணிந்து வந்த மாணவர்களுக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். வேறு உடை அணிந்து வருமாறு திருப்பி அனுப்பினர்.

கோவை தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் ஒன்றிய அரசின் குடிமையியல் பணி தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடும் நிகழ்வு இன்று காலை நடப்பெற்றது.

இந்நிகழ்வில் கருப்பு உடை அணிந்து வந்த மாணவர்களுக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளதாகவும். வேறு உடை அணிந்து வருமாறு திருப்பி அனுப்பியுள்ளனர்.

கோவை : ஆர்.என்.ரவி நிகழ்ச்சியில் கருப்பு உடை அணிந்து வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு 
மேலும் இந்த நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு கருப்பு உடையில் வந்த மாணவர்கள் மட்டுமின்றி  பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

இதனால், காவல் துறையினருடன் பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பின்னர், பத்திரிகையாளர்கள் மட்டும் அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஆனால் மாணவ, மாணவியருக்கு அனுமதி மறுத்து   திருப்பி அனுப்பியுள்ளனர்.

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10ஆயிரம் நிதி

கருப்பு உடை அணிந்த மாணவ, மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி கருப்பு நிற கோட் அணிந்தபடி நிகழ்வில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ