கோவை- திருவனந்தபுரம் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க வேண்டும் என மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவை நேரில் சந்தித்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனுவை வழங்கியுள்ளார்.
பேருந்தின் பின் இருக்கை பலகை உடைந்து விழுந்ததில் பெண் பயணிக்கு காயம்!
இது குறித்து பா.ஜ.க.வின் தேசிய மகளிரணி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் டெல்லியில் இன்று (பிப்.07) நேரில் சந்தித்து கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல மக்களின் ரயில்வே துறை தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தேன். எனது கோரிக்கை மனுவை பொறுமையாக படித்துப் பார்த்த அமைச்சர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
மத்திய ரயில்வே அமைச்சரிடம் முன்வைத்த முக்கியமான கோரிக்கைகள், கோவை – திருவனந்தபுரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். கோவை – பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் அதிகாலை 05.00 மணிக்கு புறப்படுவது பயணிகளுக்கு உகந்ததாக இல்லை. எனவே, கோவையிலிருந்து காலை 06.00 மணிக்குப் பிறகு புறப்படும் வகையில் பயண நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்.
“தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனை, புறக்கணிப்பு செய்கிறது”- டி.ஆர்.பாலு எம்.பி. குற்றச்சாட்டு!
கோவையிலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு ஐந்து ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.