சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார்.
நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அதன்படி, தமிழக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சிறப்புச் செயலாளராக இருந்த நந்தகோபால் ஐ.ஏ.எஸ்., ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரசுக் கூட்டுறவு மற்றும் உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறைக் கூடுதல் செயலாளராக இருந்த ராஷ்மி சித்தார்த் ஜாகடே ஐ.ஏ.எஸ்., சென்னை மாவட்ட ஆட்சியராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அருணா ஐ.ஏ.எஸ்., நீலகிரி மாவட்ட ஆட்சியராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அம்ரித் ஐ.ஏ.எஸ்., நில நிர்வாகத்துறையின் இணை ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
“கருத்துக் கூற அமைச்சர் உதயநிதிக்கு உரிமை உண்டு”- கமல்ஹாசன்!
தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் சிறப்புச் செயலாளராக இருந்த ஹனிஷ் சாப்ரா ஐ.ஏ.எஸ்., நகர்ப்புற நிதி மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக ஊரக மேம்பாட்டுத் திட்ட தலைமைச் செயல் அதிகாரியாக சித்ரா விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூடுதலாக பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்ட இயக்குநராகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.