Homeசெய்திகள்தமிழ்நாடு"வரும் சனிக்கிழமை சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்"- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

“வரும் சனிக்கிழமை சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்”- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

-

 

வரும் சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

விளக்கம் கேட்டு மசோதாக்களைத் திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு, “தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் வரும் நவம்பர் 18- ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெறும். ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும். மசோதாக்களை ஆளுநர் ஏன் திருப்பி அனுப்பினார் எனத் தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

“ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் என்னென்ன?”- விரிவாகப் பார்ப்போம்!

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 10- க்கும் மேற்பட்ட மசோதாக்களை தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கு விளக்கம் கேட்டு தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநருக்கு அனுப்பப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ