சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்திற்காக தன்னிச்சையாகத் தேர்வுக் குழுவை நியமித்த தமிழக அரசின் உத்தரவைத் திரும்பப் பெறுமாறு தமிழக உயர்கல்வித்துறைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்!
சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கௌரி அண்மையில் ஓய்வுப் பெற்றார். இதனையடுத்து, துணைவேந்தரை நியமிப்பதற்கு பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் அடங்கிய 4 பேர் கொண்டத் தேர்வுக் குழுவை ஆளுநர் ஆர்.என்.ரவி நியமித்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழக அரசு, பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் இல்லாத மூன்று பேர் கொண்ட தேர்வுக் குழுவை நியமித்து, அரசிதழில் வெளியிட்டது. பல்கலைக்கழக விதிமுறையின் படி, துணைவேந்தரை நியமித்தால் போதும் என்றும், பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் தேர்வுக் குழுவில் இடம் பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
‘லியோ’ இசை வெளியீட்டு விழா நடைபெறாது….. படக்குழுவினரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்த நிலையில், ஆளுநரின் ஒப்புதல் இன்றி துணைவேந்தர் தேர்வுக் குழுவை நியமிப்பதற்கான அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். அரசிதழில் வெளியிட்டதைத் திரும்பப் பெற வேண்டும் என தமிழக உயர்கல்வித்துறைச் செயலாளருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.